August 11, 2010

Pon Paavalar Society


Pon Paavalar Society
No.20, JALAN KLEDANG RAYA 13, TAMAN SRI TAHAN,
30100 IPOH, PERAK.
Tel: 012-5006161

Pon Paavalar Mandram (Tamil Poets' Society) was established in Ipoh, Perak, Malaysia on 19th April 2002. The objectives of the society are:

To enhance the knowledge and skills in Tamil language and literature; To create talented members in Tamil Literature, History, Grammar, Writing, Poetry, Arts and Social Sciences; To foster friendly relationship between the members and Malaysian Community in general; To encourage members embrace the Principles of Rukun Negara

The Pon Paavalar Society works closely with Tamil educationists worldwide to provide wide knowledge on Tamil language and its uniqueness to Tamils living all over the world.

The society is committed to enhance its services for the development of Tamil language and literature to Tamils. It held a fund raising dinner on 20th August 2006, under the patronage of Dato' G.Rajoo, Member of Executive Council of Perak State Government to enhance the financial status of the society in order to carry out many programs and iniatives related to Tamil language development.

Poet Tamilmani Ellon, Ipoh is the advisor of the Pon Paavalar Society. It is headed by Arul K.Arumugam to create a foundation known as 'Arul Nitiyam' to promote the literary works of the aspiring Tamil writers. To purchase a building for the organisations in order to conduct the functions of Persatuan Pon Paavalar. Kaninyar C.Samy AMP, PPT, PJK Deputy Chairman, Kavinyar Na.Ku. Mullaichelvan Secretary, Kavinyar K.Kootharasan PJK, Kavinyar V.Vanitha B.A.(Hons) as Treasurer, Exco Council Members: Mr.P.Krishnan, Kaninyar K.L.Narayanan PPN, Mr.K.Baskaran, Mrs. Mary, Mr.R.Gopal PJK. and Kavinyar M.Veerakumaran.

August 9, 2010

Pon Paavalar Society Contacts-Tamil

அருள் ஆறுமுகம்
HP: 0125006161

கவிஞர் சி.சாமி
HP: 0165465822

கவிஞர் முல்லைச்செல்வன்
HP: 0132767676

கே.எல்.நாராயணன்
HP: 0165962694

கவிஞர் கூத்தரசன்
HP: 0135994534

August 8, 2010

Pon Paavalar Mandram - Tamil

 மன்றத்தின் முகவரி
பொன பாவலர் மன்றம்,
எண் 20, ஜாலான் கிளேடாங் ராயா 13,
தாமான் ஸ்ரீ தஹான், 30200 ஈப்போ, பேராக்

தொலைபேசி: 012-5006161


பொன் பாவலர் மன்றம் கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவு பெற்றது. அம்மன்றம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தியும், பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும், தமிழ் மொழியின் சிறப்பு. தமிழின மேன்மைகளை வெளிப் படுத்தி தனக்கு என ஒரு தனித் தன்மையை வகுத்து வருவதை அனைவரும் அறிவர்.

மரபுப் பாவலர்களையும் புதிதாக எழுத்துத் துறையில் ஈடுபட ஆர்வம் காட்டும் தமிழ் வாசகர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் மன்றத்தில் உறுப்பியம் பெறச் செய்து, சிறப்பாக இயங்கி வருகிறது.

உலகத் தமிழர் மாமன்றத்தின் தமிழகப் பேராளர் ஐயா ஜனார்த்தனம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவர் பேராசிரியர் அமரர் மு.தமிழ்க்குடிமகன், உவமைப்பித்தர், புலவர் முனியமுத்து, தஞ்சை பல்கலைக்கழகப் பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியம், உலகத் தமிழர் மையத்தின் பொதுச் செயலாளரும், தமிழ் பற்றாளருமான உழைப்புச் செம்மல் இரா.மதிவாணன் போன்றவர்களுக்கு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி, அவர்கள் வாயிலாக உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும் எட்டுக் கோடி தமிழர்கள் பற்றியும், தமிழ் மொழியின் இன்றியமையாமையைப் பற்றியும், விரிவான செய்திகளை வெளிப் படுத்தி வந்திருக்கிறோம். இம்மன்றம் ‘ருக்குன் நெகாரா’ கோட்பாட்டைப் பின் பற்றுகிறது.

இவ்வாறான பணிகளின் தொடர்ச்சியாக, எதிர்காலத்தில் தமிழ் அறியாத் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் அறிவு பெறவும் வாழ்வியல் ஒழுக்கங்களில் அவர்கள் சிறந்து விளங்கவும் கருத்தரங்குகளை ஏற்படுத்துவது: சங்க இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்ற தொன்மைச் சிறப்புகளையும், பண்பாட்டு நெறிமுறைகளையும், தக்காரைக் கொண்டு தெளிவு படுத்தவும், மரபு வழிப் பாவினங்களையும், அவற்றின் உள்ளுரைகளையும், அருள் நிதியம் நிதி நிலையை உருவாக்கி தமிழ்ப் பாவலர்களின் எழுத்துப் படிவங்களை சமுதாயப் பார்வைக்கு கொண்டு செல்லுதலும், மன்றத்திற்கு என்று ஒரு கட்டடம் வாங்கி அதில் மன்ற நிகழ்வுகளையும் நடத்துதல் என்று பல்வேறு திட்டங்களைச் செயல் படுத்த மன்றம் எண்ணியுள்ளது.

இவற்றைச் செயல் படுத்த போதுமான நிதி வேண்டும். நிதி நிலையை, வளப்படுத்த வேண்டிய நிலையை வளப்படுத்தும் முதன்மை எண்ணத்தில் 20-08-2006 ஆம் நாளான்று ஈப்போ மாநகரத்தில், பேரா மாநில ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான மாண்புமிகு டத்தோ கோ.இராஜு அவர்கள் தலைமையில் வளர்ச்சி நிதி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தோம். இவ்விருந்து நிகழ்வில் பல அமைப்புகளின் தமிழ் அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இம்மன்றம் நாட்டின் சிறந்த தமிழ்க் கவிஞர் தமிழ்மணி எல்லோன், ஈப்போ அவர்களை ஆலோசகராகக் கொண்டும் அருள் க.ஆறுமுகம் PJK, BPP அவர்களைத் தலைவராகக் கொண்டும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அவருக்குத் துணையாகக் கவிஞர் திரு.முனுசாமி AMP, PPT, PJK துணைத் தலைவராகவும் கவிஞர் திரு.ந.கு.முல்லைச்செல்வன் செயலாளராகவும், கவிஞர் திரு.கி.கூத்தரசன் துணைச் செயலாளராகவும், கவிஞர் திருமதி.வி.வினிதா B.A.(Hon) பொருளாளராகவும், செயற்குழுவில் திரு.பி.கிருஷ்ணன், கவிஞர் திரு.கே.நாராயணன் PPN, திரு.பாஸ்கரன், திருமதி மேரி, திரு.இராமகோபால் PJK, திரு.ம.வீரகுமரன் ஆகியோரும் சேவையாற்றி வருகின்றனர்.